Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

அர்த்தம் தெரியாமல் ஆரம்பித்த கட்சிதான் பாரதிய ஜனதா… விஷயம் தெரிந்த உடனேயே 1500 பேர் விலகி விட்டனர்…. முத்துசாமி புலம்பல்….

09/03/2021 Leave a Comment

இந்தியாவின் சிவசேனா கட்சியைப் போல, இலங்கையில் ‘சிவசேனை’ என்றஅமைப்பைத் துவங்கியவர்மறவன்புலவு சச்சிதானந் தன். இவர் அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இலங்கையில் ‘பாரதிய ஜனதா கட்சி’ என்றபெயரில் ஒரு கட்சி தொடங் கம் திட்டம் இருக்கிறது என்று கூறியிருந்தார்.

இதனிடையே, யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வீ. முத்துச்சாமி என்பவர், 6 மாதத்துக்கு முன்னரே ‘பாரதிய ஜனதா கட்சி’என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை இலங்கையில் தொடங்கிவிட்டோம்என்று தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்ல, ‘பாரதியஜனதா’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என்றெல் லாம் எங்களுக்குத் தெரியாது. இந்தச் சொல் எந்த மொழிச் சொல் என்பதும் தெரியாது. கேட்பதற்கு நன்றாக இருந்தது. அதனாலேயே ‘பாரதியஜனதா கட்சி’ என்ற பெயரில்கட்சியை தொடங்கி விட்டோம் என்றும் அப்பாவித் தனமாக கூறியிருக்கிறார்.மேலும், “நாங்கள் இலங்கையில் ஆரம்பித் துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கும் இந்தியாவில் உள்ளபாரதிய ஜனதா கட்சிக்கும் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதால், எங்கள் கட்சியில் சேர்ந்த வேகத்திலேயே 1,500 பேர் விலகியும் விட்டனர்; இது எங்களுக்கு மிகவும்வருத்தம் தருகிறது” என்றும்புலம்பியுள்ளார்.

Filed Under: செய்திகள்

கோவில்களுக்கான மலர்மாலைகளும் இந்தியாவிலிருந்தே…

09/03/2021 Leave a Comment

பம்பலப்பிட்டி இந்துக் கோவில்களுக்கு அவசியமான மலர்மாலைகள் இந்தியாவிலிருந்தே கொண்டுவரப்படுவதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர கூறுகிறார்.

அதனால் வருடந்தோறும் ஒருதொகை அந்நிய செலாவணி இந்தியாவுக்குச் செல்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை உள்ளிட்ட நாடுகளுக்கு மலர் ஏற்றுமதி செய்வதன் மூலமாக இந்தியா பெருந்தொகையான வருமானத்தை வருடாந்தம் பெற்றுவருகின்றது. இலங்கையும் மலர்களை ஏற்றுமதி செய்தாலும் அந்தளவுக்கு பாரிய வெளிநாட்டுச் சந்தையைக் கட்டியெழுப்ப இயலவில்லை என அமைச்சர் கூறியுள்ளார்.

நேற்று (08) கதிர்காமத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டே அவர் அதனைக் குறிப்பிட்டார்.

மார்ச்சு 22 அந் திகதி தொடக்கம் கதிர்காமம் புனித தலத்தில் பொலித்தின் மலர்மாலைகளை தடைசெய்வதாகவும் இயற்கையான மற்றும் எண்ணெய்க் கடதாசி மலர் மாலைகளின் பாவனையை கட்டாயமானதாக ஆக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி – தொடரையும் கைப்பற்றியது

09/03/2021 Leave a Comment

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. 9.3 ஓவர்களில் அந்த அணி 46 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. குணதிலகா 9 ரன்னிலும், டிக்வெல்லா 4 ரன்னிலும், பதும் நிசங்கா 5 ரன்னிலும், பொறுப்பு கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 11 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

5-வது விக்கெட்டுக்கு ஆஷென் பந்தரா, தினேஷ் சண்டிமாலுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 20 ஓவர்களில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. தினேஷ் சண்டிமால் 46 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 54 ரன்னும், ஆஷென் பந்தரா 35 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 44 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி தரப்பில் பாபியன் ஆலென், கெவின் சின்கிளைர், ஜாசன் ஹோல்டர், ஒபெட் மெக்கா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தாலும், அந்த அணியின் வீரர்கள் அடித்து ஆடினார்கள். சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயாவின் ஒரு ஓவரில் பாபியன் ஆலென் 3 சிக்சர்கள் பறக்கவிட்டு அணி வெற்றி இலக்கை எட்ட வைத்தார்.

19 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாசன் ஹோல்டர் 14 ரன்னும் (23 பந்து, ஒரு சிக்சர்), பாபியன் ஆலென் 21 ரன்னும் (6 பந்து, 3 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சிமோன்ஸ் 26 ரன்னிலும், இவின் லீவிஸ் 21 ரன்னிலும், கிறிஸ் கெய்ல் 13 ரன்னிலும் கேப்டன் பொல்லார்ட் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்தனர்.

இலங்கை அணி தரப்பில் லக்‌ஷன் சண்டகன் 3 விக்கெட்டும், டி சில்வா, சமீரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தியதுடன் அதிரடியாக 21 ரன்கள் திரட்டியும் ஆல்-ரவுண்டராக ஜொலித்த வெஸ்ட்இண்டீஸ் வீரர் பாபியன் ஆலென் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இலங்கை 43 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஆட்டம் ஆன்டிகுவாவில் நாளை நடக்கிறது.

Filed Under: செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு காணியுரிமை எப்போது?

09/03/2021 Leave a Comment

சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிக்கல் இல்லாத காணி உரிமையை உறுதி செய்வதே தமது நோக்கம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, இத்திட்டத்தில் பெருந்தோட்ட இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தெளிவான உரிமையின்றி அரச காணிகளை அனுபவித்து வரும் குடும்பங்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்குதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமானது.

இத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் காணிப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமா? இதுவரையில் மலையகத்தில் தோட்டப்புற மக்களுக்கு பல வீட்டுத் திட்டங்களை அரசாங்கங்கள் அமைத்துக் கொடுத்துள்ள போதிலும் அதற்கு இதுவரையில் உரித்து கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

மூன்று தீவுகளையும்  இந்தியா கோருவது சிறுபிள்ளைத்தனமானது – விமல் வீரவன்ச

09/03/2021 Leave a Comment

அமைச்சரவையின் அனுமதியையும் மீறி மூன்று தீவுகளுக்கான திட்டங்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோருவது சிறுபிள்ளைத்தனமானது என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் அவர் மேலும்,

“வடக்கு மாகாணத்திலுள்ள நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு ஆகிய மூன்று தீவுகளையும் இந்தியாவிடம் ஒப்படைக்க அரசு ஒருபோதும் தயாரில்லை. 

அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதியின் பிரகாரம் குறித்த மூன்று தீவுகளிலும் மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன எனவும் சீன நிறுவனத்துக்கே இந்தத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது எனவும் தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

பொதுபல சேனா அமைப்பை நாம் தடை செய்ய மாட்டோம் – அரசாங்கம்

09/03/2021 Leave a Comment

“ஆணைக்குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம். அதில் ஒன்றை குறிப்பிட்டுக் கூறுவதென்றால், பெளத்த அமைப்பான பொதுபல சேனா அமைப்பை தடை செய்யக்கோரி ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அவ்வாறு கூறப்பட்டிருப்பினும், பொதுபல சேனா அமைப்பை நாம் தடை செய்ய மாட்டோம்.” அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாம் போதனைகளை நடத்தும் மத்ரஸா பாடசாலைகள் தொடர்பில் நாம் கவனம் செலுத்துவோம். மேலும் மத்ரசா பாடசாலைகளை, கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான முழுமையான அதிகாரம் அரசாங்கத்துக்கும் கல்வி அமைச்சுக்கும் உண்டு.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம்.” என தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

கொரோனா மரணம் – மேலும் ஐவர் பதிவு

09/03/2021 Leave a Comment

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 05 பேர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக் களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.

Filed Under: கொவிட்-19 செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்…

08/03/2021 Leave a Comment

உயிர்த்த ஞாயிறு தாக்குல்தாரிகளை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கான செயற்பாங்கு தொடர்பில் அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு ஞாயிறு தினத்துடன் இணைந்துகொண்ட கர்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையவர்கள் விசேட கூற்று ஒன்றினை வெளியிட்டு இந்த தாக்குதலில் குற்றஞ்சுமத்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்காக அரசாங்கம் இதனைவிட நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றவேண்டுமென்பதை வலியுறுத்தினார்.

நேற்று (07) நாடு பூராவிலும் உள்ள தேவாலயங்களில் நடாத்தப்பட்ட கறுப்பு ஞாயிறு எதிர்ப்பினை அடுத்த ஞாயிறு தொடக்கம் தொடர்ச்சியாக அமுலாக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த ஏப்பிறல் 21 ஆந் திகதிக்கு முன்னராகஇந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கத்தக்கவகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதன் பின்னர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடுமெனவும் அதன்போது கத்தோலிக்க அருட்தந்தைமார்கள்தெரிவித்தார்கள்.

இந்த தாக்குதலின் உண்மையான ஆரம்பகர்த்தாக்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்பது கறுப்பு ஞாயிறு எதிர்ப்பாளிகளின் அடிப்படை கோரிக்கையாக அமைகின்றது. அத்துடன் அவர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய அனைத்து சட்டநடவடிக்கைளையும் தாமதமின்றி எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.அதேவேளையில் சனாதிபதி கடந்த 06 ஆந் திகதி ஊருடன் உரையாடல் (கம சமங்க பிலிசந்தர) பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தான் எவ்விதத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விற்று அதிகாரத்திற்கு வரவில்லை எனக் கூறினார்.

Filed Under: செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 3-2 என கைப்பற்றியது நியூசிலாந்து

08/03/2021 Leave a Comment

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வென்று தொடர் சமனிலையில் இருந்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது. வேட் 29 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 44 ரன்கள் குவித்தார். கேப்டன் ஆரோன் பிஞ்ச் 36 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து 15.3 ஓவர்களில் 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மார்டின் கப்தில் அதிரடியாக ஆடி 46 பந்துகளில் 4 சிக்சர், 7 பவுண்டரியுடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கான்வே 36 ரன்னும், பிலிப்ஸ் 34 ரன்னும் எடுத்துள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியவுக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து.

ஆட்ட நாயகன் விருது மார்டின் கப்திலுக்கும், தொடர் நாயகன் விருது இஷ் சோதிக்கும் அளிக்கப்பட்டது.

Filed Under: ஆடுகளம்

மியான்மரில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை விடுவித்திடுக…. பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை….

08/03/2021 Leave a Comment

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு, அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ராணுவத்தின் இந்த அராஜக நடவடிக்கையை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களின் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மியான்மர் போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டதால் தெய்ன் ஸா உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் பொது சட்ட விதிகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவரையும் எங்கள் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளக் கேட்டுக் கொள்கிறோம். இதழியல் என்பது குற்றச் செயல்அல்ல. மியான்மரில் ராணுவத்துக்குஎதிராக நடந்த போராட்டத்தைப் பதிவு செய்ததால் கைதுசெய்யப்பட்ட தெய்ன் ஸா உள்ளிட்ட 5 பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும்”என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.மியான்மர் ராணுவத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மியான்மரில் இளம் போராட்டக் காரர்கள் எதிர்ப்பு போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Filed Under: உலகம்

  • « Previous Page
  • 1
  • …
  • 584
  • 585
  • 586
  • 587
  • 588
  • …
  • 605
  • Next Page »

Recent Posts

  • மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்துடன் மோதிய சொகுசு பேருந்தின் சாரதி கைது!
  • மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பேருந்துடன் மோதிய சொகுசு பேருந்தின் சாரதி கைது!
  • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுவதிலிருந்து எதிர்க்கட்சியின் சில கட்சிகள் விலகல்!
  • ரணில் – மைத்ரி காலத்தில் மறைக்கப்பட்ட குற்றச்சாட்டுப் பட்டியலை அம்பலப்படுத்தினார் பிமல் ரத்நாயக்க!
  • தலதாவின் கருத்து முரண்பாடுகள் மற்றும் ஷிரந்தியின் மருத்துவ நிலை குறித்த புதிய உண்மைகள்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.