“இலங்கைக்கு எதிரான இந்த வாக்கெடுப்புக்களை ஒரு பாடமாகக் கருதிச் செயற்பட வேண்டும். இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கெதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.” என்று தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்,
ஐக்கிய நாட்டு மனித உரிமை பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக 22 நாடுகள் வாக்களித்தமைக்கு இலங்கையில் கொண்ட வெறுப்பு அல்ல மாறாக தற்போதைய அரசாங்கத்தின் ஜனநாயக அத்துமீறலே காரணம் என்பதை நாம் அறிந்து கொண்டோம்.
அந்த செயற்பாடுகளுக்கு அமைவாக இலங்கை அரசு தீர்மானங்களைப் பெற வேண்டும். எதிர்வரும் காலங்களில் இந்த அரசாங்கம் சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில் நம் நாடு பாரிய பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும்.
நாம் இலங்கையர் என்ற ரீதியில் இந்த எதிர்ப்புக்கு ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.