ஒருசில அரிசியாலை உரிமையாளர்கள் சமூக ஊடகங்களுக்குப் பணம்கொடுத்து நாட்டில் அரசித் தட்டுப்பாடு நிலவுவதாக போலியான செய்திகளை வெளியிடுவதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகே குற்றஞ் சுமத்தியுள்ளார்.
கடந்த 23 ஆந் திகதி நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது சம்பந்தமாக கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் நாட்டில் எந்தவிதமான அரிசித் தட்டுப்பாடும் நிலவுவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். ” மக்களின் நுகர்வுக்காக மாதாந்தம் ஒரு இலட்சத்து தொன்றூற்றி ஐயாயிரம் கிலோ (195. 000Kg) அரிசி தேவைப்படுகின்றது. வருடமொன்றுக்கான நுகர்வுத் தேவை 24 மில்லியன் மெட்ரிக் தொன்களாகும். இன்றளவில் 06 மில்லியன் மெட்ரிக் தொன் நெல் மிகைநிலை காணப்படுகின்றது. நெல் தட்டுப்பாடு நிலவுவதாக கூறுபவர்களுக்கு நான் சவால் விடுக்கத் தயார்.” எனக் கூறியுள்ளார்.
