ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகி உள்ளதாக இன்று (07) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார்.
இன்றைய (07) நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் இந்த அறிவிப்பினை சற்று முன்னர் வெளியிட்டார்.
நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிராகவும் கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.




