கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 07 பேர் நேற்றைய தினம் (28) உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக் களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது.
Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka
Unbiased, Unstoppable
கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 07 பேர் நேற்றைய தினம் (28) உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக் களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 471 ஆக உயர்ந்துள்ளது.
மீஹகாவத்த – தெல்கொட பகுதியில் தோஷத்தை நீக்குவதாக கூறி 9 வயதுச் சிறுமி ஒருவர் பலமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமிக்கு தோஷம் இருப்பதாகவும், அதனை நீக்க வேண்டும் என தீர்மானித்த பெற்றோர் பூசகர் ஒருவரிடம் அழைத்து சென்றுள்ளனர்.
பூசகரும் தோஷம் நீக்குவதாக தெரிவித்து தடி ஒன்றினால் சிறுமியை தாக்கியதில் அவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
சம்பவத்தில் காயமடைந்த சிறுமியை பியகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் பூசகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பெலின்டா பென்சிச்சை (சுவிட்சர்லாந்து) 66 நிமிடங்களில் தோற்கடித்து மகுடம் சூடினார்.
அவருக்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது. முதல் சுற்றில் இருந்து இறுதிப்போட்டி வரை 5 ஆட்டங்களிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஸ்வியாடெக் ஒரு செட்டை கூட இழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான 19 வயதான ஸ்வியாடெக் கைப்பற்றிய 2-வது பட்டம் இதுவாகும். தரவரிசையில் 18-வது இடம் வகிக்கும் ஸ்வியாடெக் இந்த வெற்றியின் மூலம் நாளை வெளியாகும் புதிய தரவரிசையில் 15-வது இடத்துக்கு முன்னேறுகிறார்.
இந்த மாத தொடக்கத்தில் சிரியாவின் இர்பில் பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் அதன் கூட்டுப் படையினரின் தளங்களை இலக்குவைத்து ஈரானிய ஆதரவு போராளிகள் குழு ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தியது. அதில் ஒரு சிவில் காண்டிராக்டர் கொல்லப்பட்டார். ஒரு அமெரிக்க படை வீரர் மற்றும் ஐந்து பேர் காயம் அடைந்தனர்.
இதற்கு முன்னதாக, பாக்தாத் நகரில் அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்ட தளத்திலும் ராக்கெட் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அங்கு தான் அமெரிக்க தூதரகம் மற்றும் வேறு சில நாடுகளின் தூதரகங்கள் இருந்தன. அதற்கு பதிலடி தரும் விதமாகவே ஈரானிய போராளிகள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையான பெண்டகன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் தங்கள் தரப்பில் ஒருவர்மட்டுமே உயிரிழந்ததாக போராளிகள் குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், சிரியாவில் நடக்கும் மோதல்கள் தொடர்பான தகவல்களை கண்காணிக்கும் அமைப்பு, குறைந்தபட்சம் 22 பேராவது உயிரிழந்திருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. சமீபத்திய அமெரிக்க தாக்குதல், கிழக்கு சிரியாவை இணைக்கும் இராக்கிய எல்லை அருகே நடத்தப்பட்டுள்ளதாக பெண்டகன் கூறுகிறது.
முறையான ராஜீய ஒத்துழைப்பு மற்றும் கலந்தாலோசனைகளுடன் இந்த வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக அது தெரிவித்துள்ளது. இராக்கில், இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும்குழுவை எதிர்கொள்வதற்காக அங்குள்ள இராக்கிய படைகளுக்கு துணையாக சுமார் 25 ஆயிரம் அமெரிக்க படையினர் உள்ளனர். இர்பில் நகரில் தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட 11 நாட்கள் கழித்துசிரியா, இராக் எல்லையில் அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தியிருப்பது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம், இதுதான் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு ஜோ பைடன் உத்தரவிட்ட முதலாவது ராணுவ நடவடிக்கை. இந்த ராணுவ நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உளவுத்தகவல்களை பகிர்ந்த இராக்கிய அரசுக்கு அமெரிக்கா நன்றி தெரிவித்துள்ளது.
டொனால்டு டிரம்பால் முறித்துக் கொள்ளப்பட்ட ஈரானியஅணுசக்தி ஒப்பந்தத்தை மீட்டெடுப்போம் என தேர்தல் பரப்புரையின் போது அறிவித்த ஜோ பைடன், அவரது நிர்வாகத்தில் அமைதிவழி தீர்வு க்கு முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தீக்கதிர்
“என்னுடன் பேசி தீர்க்க வேண்டிய பல்வேறு விடயங்கள் காணப்பட்டபோதிலும், அதை பேசி தீர்த்துக்கொள்ளாமல், நயவஞ்சகமான முறையில் தன்னை கட்சியிலிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறு தொழிலாளர் தேசிய முன்னணியினால் முன்னெடுக்கப்பட்ட நயவஞ்சக செயற்பாடுகளை, மக்களுக்கு வெளிப்படுத்துவேன்.” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா-தலவாக்கலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்…
“தொழிலாளர் தேசிய முன்னணி என்ற கட்சியை யாப்பு எழுதி நாம் உருவாக்கினோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து வருகைத் தந்துள்ள ஒரு கூட்டம், தொழிலாளர் தேசிய முன்னணியை இல்லாதொழிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே, தன்னை அந்த கட்சியிலிருந்து வெளியேற்றிவிட்டு,அந்த கட்சியை அவர்களின் தேவைக்கு ஏற்ப நடத்த முயற்சித்து வருகின்றது.
இதனாலேயே கட்சியை கலைக்கும் தீர்மானத்தை எடுத்து, தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகினேன். இனிவரும் காலங்களில் அவர்கள் வேறொரு அரசியல் கட்சியை உருவாக்கி, செயற்படுவதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது.
தொழிலாளர் தேசிய முன்னணியின் ஊடாக அடைய நினைத்த அரசியல் இலக்குகளை, எதிர்வரும் காலத்தில் பாரிய மலையக கொள்கை சார்ந்த ஜனநாயக அரசியலின் ஊடாக அடைய முயற்சிப்பேன்.” என்றார்.
தண்ணிமுறிப்பு கிராம சேவகர் பிரிவில் குமுளமுனை தண்ணிமுறிப்பு குள வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பேரானந்தம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தினை துப்பரவு செய்து டோசர் இயந்திரம் மூலம் காணியை சமப்படுத்தும் வேலைகளில் குறித்த காணி உரிமையாளர் நேற்றையதினம் ஈடுபட்டிருந்தவேளை, அவ்விடத்துக்கு வருகைதந்த பௌத்த தேரர் ஒருவர் தலைமையிலான தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இவ்விடம் அனைத்தும் குருந்தூர்மலைக்கு சொந்தமான தொல்லியல் புராதன பூமி என தெரிவித்ததோடு, 500 ஏக்கர் நிலங்கள் புராதன பூமி இங்கு இந்த வேலைகளிலும் ஈடுபடமுடியாது இங்கு எவருக்கும் நிலங்கள் இல்லை என தெரிவித்துள்ளதோடு, முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தினர் மற்றும் வன திணைக்களத்தினரை அழைத்து காணி உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அத்தோடு, காணியை மீண்டும் துப்பரவு செய்யமுடியாது என தெரிவித்து தடை விதித்து சென்றுள்ளதோடு காணி உரிமையாளரை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு வருகை தருமாறு தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசம் தமிழ் மக்கள் பல ஆண்டு காலமாக குடியிருந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்ட தண்ணிமுறிப்பு கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த பிரதேசம் என்பதோடு போருக்கு பின்னர் மீண்டும் தற்போது அப்பகுதியில் உள்ள தமது காணிகளை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இந்த காணிகளில் வேலிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே கிளிசறியா மரங்கள் நடப்பட்டு எல்லைகள் இடப்பட்டுள்ளதும் மக்களின் காணிகளில் மா ,பலா , தென்னை , போன்ற மரங்கள் கூட இன்றும் நிற்பதை காணமுடிகின்றது. இந்த நிலையில் கடந்த மாதம் 18 ஆம் திகதியிலிருந்து குருந்தூர் மலையில் இராணுவம் , தொல்லியல் திணைக்களம் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நிலையில் தற்போது அதனை அண்டிய தமிழ் மக்களுக்கு சொந்தமான குடியிருந்த நிலங்கள் ,விவசாய நிலங்கள் என்பனவற்றை அபகரிக்கும் நோக்கமாக நேற்று இந்த நடவடிக்கையில் பௌத்த தேரர் தலைமையிலானோர் ஈடுபட்டுள்ளமை கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளதுமையும் குறிப்பிடதக்கது.
கிராம மக்கள் பத்திரிகை நிருபர்களை தொடர்புகொண்ட பின், அங்கு சென்ற பத்திரிகை நிருபர்களின் ஊடக அடையாள அட்டை விபரங்களும் பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது. இது ஊடக சுதந்திரத்தை கேள்விக்குறியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வுகள் காரணமாக விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக இவற்றினை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்தனர்.
சட்ட விரோதமான முறையில் அதிகளவான மண் அகழப்படுவதன் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் இதன்போது விவசாயிகள் சுட்டிக்காட்டினார்கள்.
முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு உள்ளஉரிமையை மதிப்பதற்கும் உத்தரவாதம் செய்வதற்குமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக எடுக்கவேண்டும் என இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
முஸ்லீம் சமூகத்திற்கு உடல்களை அடக்கம் செய்வதற்குள்ள உரிமையை இலங்கை மதிக்கவேண்டும் என இஸ்லாமியஒத்துழைப்பு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் Yousef Al Othaimeen, இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46 அமர்வின் உயர்மட்ட கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு முன்னர் ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைக்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு வருகை தரும் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இவர்கள் தங்கள் கடமைகளின் போது எதிர்கொள்ளும் அபாயங்களைக் கருத்தில் கொண்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.