Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

எதிர்காலத்திலே மட்டக்களப்பு மாவட்டம் ஓர் அத்திப்பட்டி கிராமமாக மாறும் – கோவிந்தன் கருணாகரம்

24/03/2021 Leave a Comment

எதிர்காலத்திலே மட்டக்களப்பு மாவட்டம் மீண்டும் ஓர் அத்திப்பட்டி கிராமமாக மாறும் சூழல் காணப்படுவதாகவும், மண்கொள்ளையர்கள் செய்யும் அநியாயத்தை ஜனாதிபதி கருத்திற்கொள்ள வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில், அவரது அவலுகத்தில் இன்று (24.03.2021) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இதுகுறித்து மேலும்,

“மட்டக்களப்பின் வனவளம் எப்படி பாதுக்காகப்படுகிறது, அத்துமீறப்படுகின்றது, சேனைப்பயிர்ச்செய்கை என்ற ரீதியிலே வனவளம் காவுகொள்ளப்படுகின்றது. இந்த மாவட்டத்தின் கனியவளங்களான இல்மனைட், மண் எப்படி அழிக்கப்படுகின்றன. என்பதை ஜனாதிபதி வந்து பார்வையிட வேண்டும். 

இந்த அரசின் அடி வருடிகளாக சில அரச அதிகார்கள் செயற்பட்டு இந்த மாவட்ட வளங்களை அழிப்பதை நேரடியாக அழிப்பதை பார்க்கவேண்டும். அவர் ஒரு இனத்திற்கான ஜனாதிபதியாக இருக்க கூடாது.” என்றார்.

இதன்போது, ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பாக அவர் கருத்துத் தெரிவித்தபோது,

“இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட பிரேரணை அமோக வரவேற்புடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 22 நாடுகள் பிரேரணைக்கு ஆதரவாகவும் 11 நாடுகள் எதிராகவும் 14 நாடுகள் நடுநிலையாகவும் வாக்களித்துள்ளன.

ஆனால், இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர், அவர்களுக்கு பூரண அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறிய இந்தியா இந்தப் பிரேரணையில் நடுநிலை வகித்தது ஈழத் தமிழர்களை வேதனைக்கு உள்ளாக்கிய விடயமாகவே தமிழர்கள் பார்க்கின்றனர்.” என்றும் அவர் தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

45 இலஞ்ச வழக்குகள் வாபஸ்….

23/03/2021 Leave a Comment

இலஞ்ச ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்டிருந்த 45 வழக்குகளை வாபஸ் பெற்றுக்கொள்ள மேற்படி ஆணைக்குழுவின்தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர்சபை கொள்கைரீதியான தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள்வெளியாகி உள்ளன.

இது சம்பந்தமாக சனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திரபர்னாந்து கொழும்பு பிரதான நீதவானுக்கு நேற்று (22) அறிவித்ததாக ஊடகங்களில்செய்திகள் வெளியாகி இருந்தன. தொழில்நுட்பவழுக்கள் நிலவுகின்றமையே அவ்வாறு வாபஸ்பெறக் காரணமெனக்காட்டப்பட்டுள்ளது.

இவ்விதமாக வாபஸ்பெற்றுக்கொள்ளப்படவுள்ள 45வழக்குகளுக்காக இலஞ்ச ஆணைக்குழுவின் தலைவரை உள்ளிட்ட பணிப்பாளர்சபையின் அங்கீகாரமின்றி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருத்தல்மற்றும் இந்த ஆணைக்குழுவின் ஆணையாளர்கள்மூவரும் கையொப்பமிட்டிராமை ஆகிய திட்டவட்டமானகாரணங்கள் காட்டப்பட்டுள்ளன.

Filed Under: செய்திகள்

முப்படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாதவகையிலான சட்டங்கள் கொண்டுவரப்படும்….

23/03/2021 Leave a Comment

இலங்கையின் முப்படையினர் இந்நாட்டில் மாத்திரமன்றி வெளிநாடுகளிலும் புரிகின்ற நடவடிக்கைகளின்போது வழக்குத் தொடுக்கவோ அல்லது தண்டனை வழங்கவோ முடியாதவாறு, அவர்களுக்கு பூரணமான பாதுகாப்பு வழங்குவதற்கு அவசியமான சட்டங்களை அங்கீகரித்துக் கொள்வதாக பொதுஜன ஐக்கிய முன்னணி வலியுறுத்துகின்றது.

அதற்கென அவசியமான சட்டங்களை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் அதைப்போலவே அதனை விஞ்சிச்சென்று படைவீரர்களின் பாதுகாப்பிற்கான புதிய உறுப்புரைகளை அரசியலமைப்பில் சேர்க்க எதிர்பார்ப்பதாகவும் அக்கட்சி கூறுகின்றது.

அக்கட்சியின் தலைவர் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பத்தரமுல்ல, வோட்டர்ஸ் எஜ் வளாகத்தில் நேற்று (22) நடைபெற்ற கட்சியின் உடக சந்திப்பின்போதே அதனை வலியுறுத்தினார்.

Filed Under: செய்திகள்

நாடு முழுவதிலும் புதிதாக 197 பொலிஸ் நிலையங்கள் …

23/03/2021 Leave a Comment

நாட்டில்புதிதாக 197 பொலிஸ் நிலையங்களை நிர்மாணிப்பதாகவும் அதற்காக 10,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்புசெய்யத் தயார் எனவும்  அரசாங்கத் தகவல்கள் வெளிப்படுத்தி உள்ளன. 

பொலிஸிற்குப் பொறுப்பான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்திற்கு  வித்தியாசமான கருத்து தெரிவித்து விசேட அதிரடிப்படையணி (எஸ்.ரீ.எப்.) மற்றும் இராணுவத்தை பொலிஸாரின் தலைமையில்  ஈடுபடுத்தி  குற்றச்செயல்களை தடுப்பதாக கூறியுள்ளார்.

 நாடுபூராவிலும் முன்னறிவித்தலின்றி  இந்த  நடவடிக்கையை அமுலாக்குவதாக கூறியுள்ளார். போதைப்பொருள்வியாபாரத்தை ஒழித்தல்,  கறுப்புப்பணவியாபாரத்தை  ஒழித்தல், குற்றச்செயல்களைஒழித்தல் ஆகிய நோக்கங்களை  எடுத்துக்காட்டிஇந்த புதிய பொலிஸ் நிலையங்களை நிறுவத் தயாராகி வருகிறார்கள். சனாதிபதியவர்களின்சுபிட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக இந்த பொலிஸ் நிலையங்கள்அமைக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுளளது. 

Filed Under: செய்திகள்

பயங்கரவாதத்தை தோற்கடித்ததாக கூறுகின்ற இந்த ஆட்சியாளர்கள் சுற்றாடலை அழிக்கின்ற பயங்கரவாதிகளாக மாறிவிட்டார்கள் – சமந்த வித்தியாரத்ன

23/03/2021 Leave a Comment

“மிகவும்கொடிய பயங்கரவாதத்தை தோற்கடித்ததாக கூறுகின்ற இந்த ஆட்சியாளர்கள் சுற்றாடலை அழிக்கின்ற பயங்கரவாதிகளாக மாறிவிட்டார்கள்.” என்று மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர்    சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்த கருத்தாவது,

“மக்கள் அரசாங்கமொன்றை ஆட்சிபீடமேற்றுவது சுற்றாடலை பாதுகாத்திடவே. சுற்றாடல் அமைச்சரிடமிருந்து சுற்றாடலைப் பாதுகாக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. வனசீவராசிகள் அமைச்சரிடமிருந்து வனசீவராசிகளை பாதுகாக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. சனாதிபதியிடமிருந்து சுற்றாடலைப் பாதுகாக்கவேண்டி எற்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அன்பர்களான வியாபாரிகளின் டோசர்கள் காடுகளில் போடப்பட்டுள்ளன.   இந்த அரசாங்கத்திடமிருந்து சிங்கராஜவை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. நக்கள்ஸ், திரிகோணமடுவ, வில்பத்துவை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. இது பாரிய விபத்து. கட்சி நிற பேதமின்றி தமக்கு உயிர் கொடுக்கின்ற இந்த சூழற்றொகுதியை பாதுகாத்திட ஒன்றுசேருமாறு இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் கூறுகிறோம்.” என்றார்.

Filed Under: செய்திகள்

உலகின் வலிமையான ராணுவம் : அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடம்….

23/03/2021 Leave a Comment

உலக அளவில் வலிமையான ராணுவத்தை கொண்ட நாடுகள் குறித்து, ஆய்வு நடத் தப்பட்டு அதன் முடிவுகள், ‘மிலிட்டரி ரைடக்ட்’ என்ற ராணுவ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ராணுவத்துக்கு பட்ஜெட்டில்ஒதுக்கப்படும் நிதி, சுறுசுறுப் பான ராணுவ வீரர்கள் எண் ணிக்கை, மொத்த வான்படை, கடற்படை, தரைப்படை, அணுஆயுத பலம், சராசரி சம்பளம்உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருந்தது.இதன்படி ராணுவ வலிமைகுறியீட்டில், 100-க்கு 82 புள்ளிகளுடன் சீனா முதலிடத்திலும், 74 புள்ளிகளுடன் அமெரிக்கா 2-ஆம் இடத்திலும், 69 புள்ளிகளுடன் ரஷ்யா 3-ஆம் இடத்திலும், 61 புள்ளிகளுடன் இந்தியா4-ம் இடத்திலும் வந்துள்ளன. 58 புள்ளிகளுடன் பிரான்ஸ் 5-ஆம்இடத்தையும், 43 புள்ளிகளுடன் இங்கிலாந்து 9-ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.

ராணுவத்துக்கு அதிகம் செலவிடுவதில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்தாலும், ராணுவவலிமையில் அந்நாடு பின்னுக்குதள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா, தனது ராணுவத்துக்கு ஆண்டுக்கு 73 ஆயிரத்து 200 கோடி டாலர் செலவிடுகிறது. சீனா, 26 ஆயிரத்து 100 கோடிடாலரும், இந்தியா 7 ஆயிரத்து 100 கோடி டாலரும் செலவிடுகின்றன.போர் வருவதாக யூகித்துக் கொண்டால், 14 ஆயிரத்து 141 விமானங்கள் கொண்ட அமெரிக்கா வான்வழி போரில் வெற்றிபெறும். 406 கப்பல்களைக் கொண்ட சீனா, கடல்வழி போரில் வெற்றி பெறும். 54 ஆயிரத்து 866 ராணுவ வாகனங்கள் கொண்ட ரஷ்யா, தரைவழி போரில் வெற்றி பெறும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Filed Under: உலகம்

குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை பௌத்த பூமியாக்க நடவடிக்கை!

23/03/2021 Leave a Comment

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையைச் சுற்றியுள்ள மேலும் 400 ஏக்கர் காணியை, பௌத்த பூமியாக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளரிற்கு, தொல்பொருள் திணைக்களம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளது.

குருந்தூர் மலையை சுற்றியுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அமைந்துள்ள பகுதிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு குறித்த எழுத்துமூல அறிவிப்பில்  கோராப்பட்டுள்ளது.

குறித்த 400 ஏக்கர் காணியில், சுமார் 150 ஏக்கர் காணி, தண்ணி முறிப்பு கிராமத்திற்கு உரிய தமிழ் மக்களுடையது என்பதுடன், மிகுதி காணிகள் நாகஞ்சோலை வனப்பகுதியில் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.

இந்த காணியை தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒப்படைக்குமாறு வடக்கு மாகாண ஆளுனர் திணைக்களத்திலிருந்தும், கரைத்துறைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளிற்கு தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் முதலாம் திகதி முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இந்த கூட்டத்தில்,  400 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்களம் கோரிய விடயம் குறித்து ஆராயப்படவுள்ளது.

அதன் நிகழ்ச்சி நிரலில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி : ஆதவன் செய்திகள் 

Filed Under: செய்திகள்

இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ஏனைய நாடுகளுக்கு உரிமை இருக்கிறது – லக்ஷ்மன் கிரியெல்ல

23/03/2021 Leave a Comment

”இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு ஏனைய நாடுகளுக்கு உரிமை இருக்கிறது.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“அரசாங்கத்திற்கு அதன் விருப்பத்திற்கேற்ப செயற்பட முடியாது. ஊடக சுதந்திரம் , ஜனநாயகம் என்பவற்றை பாதுகாக்க வேண்டும். இறையான்மை எனக் கூறி இவற்றின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்க முடியாது. மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினை முழு உலகிற்கும் உரித்துடையதாகும். 

தற்போது கட்டுப்பாடின்றி பள்ளத்தில் செல்லும் வாகனத்தைப் போல அரசாங்கம் பயணித்துக் கொண்டிருப்பது கவலைக்குரியது.

தற்போதைய அரசாங்கம் நிலையற்ற கொள்ளையுடையதாகும். அதனால் தான் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு விடயத்தையும் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் பிரிதொரு விடயத்தையும் கூறிக் கொண்டிருக்கிறது.

ஐ.நா.வில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் யுத்தம் தொடர்பில் 25 வீதமான விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன.

எஞ்சிய 75 வீதம் இலங்கையின் ஜனநாயகம் , நீதிமன்ற சுயாதீனத்தன்மை, சிறுபான்மை இனத்தவர்கள் நடத்தப்படும் விதம், மாகாணசபைத் தேர்தல் உள்ளிட்டவை தொடர்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.” என்றார்.

Filed Under: செய்திகள்

சம்பள உயர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுப்போம் – நீர் வழங்கள் தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு

23/03/2021 Leave a Comment

சம்பள உயர்வு வழங்கப்படாத நிலையில், தாம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக நீர் வழங்கள்  தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நீர்வழங்கல்  பணியாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் சம்பள உயர்வு இதுவரை தமக்கு அவ்வாறு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. கடந்த ஜனவரி மாதம் முதல் சம்பள உயர்வு வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், அதனை வழங்குவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்  நீர் வழங்கள்  தொழிற்சங்கத்தின் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் இணை அமைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, சம்பள முரண்பாடுகள் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவ்வாறு தொழிற்சங்கள் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

மீன்பிடி பூனைகளை பாதுகாப்பதில் வன அதிகாரிகள் தோல்விக்கண்டுள்ளனர் – சூழலியலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்

23/03/2021 Leave a Comment

களுத்துறை காடுகளில் அதிகளவில் வாழும் மீன்பிடி பூனைகளை பாதுகாப்பதில் வன அதிகாரிகள் தோல்விக்கண்டுள்ளதாக சூழலியலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

களுத்துறையில் வாகனத்தில் மோதுண்டு மீன்பிடி பூனைகள் உயிரிழப்பதாகவும், அதுகுறித்து வன அதிகாரிகள் முறையாக செயற்படவில்லை எனவும் சூழலியலாளர்கள் கூறுகின்றனர்.

நடுத்தர அளவிலான மீன்பிடி பூனை இலங்கையில் பல்வேறு வனப்பகுதிகளிலும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 579
  • 580
  • 581
  • 582
  • 583
  • …
  • 604
  • Next Page »

Recent Posts

  • கிரேக்க பிணைமுறி வழக்கு: கப்ரால் தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றார்!
  • முன்னாள் பிரதான நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!
  • தலதா அதுகோரல திடீரென ஆவேசம்: ஷானி அபேசேகர மீதும் தாக்குதல்!
  • ஷிரந்தி ஓரங்கட்டப்பட்டார்: ஷிரந்தி ராஜபக்ஷ மொட்டு கட்சியின் உறுப்பினரல்லர் என சாகர காரியவசம் அறிவிப்பு!
  • கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது – இந்திய உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.