Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

கொரோனா மரணம் – மேலும் ஐவர் பதிவு

09/03/2021 Leave a Comment

கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 05 பேர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக் களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.

Filed Under: கொவிட்-19 செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் நடந்துகொள்ள வேண்டும்…

08/03/2021 Leave a Comment

உயிர்த்த ஞாயிறு தாக்குல்தாரிகளை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கான செயற்பாங்கு தொடர்பில் அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு ஞாயிறு தினத்துடன் இணைந்துகொண்ட கர்த்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையவர்கள் விசேட கூற்று ஒன்றினை வெளியிட்டு இந்த தாக்குதலில் குற்றஞ்சுமத்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்காக அரசாங்கம் இதனைவிட நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயலாற்றவேண்டுமென்பதை வலியுறுத்தினார்.

நேற்று (07) நாடு பூராவிலும் உள்ள தேவாலயங்களில் நடாத்தப்பட்ட கறுப்பு ஞாயிறு எதிர்ப்பினை அடுத்த ஞாயிறு தொடக்கம் தொடர்ச்சியாக அமுலாக்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்த ஏப்பிறல் 21 ஆந் திகதிக்கு முன்னராகஇந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கத்தக்கவகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதன் பின்னர் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடுமெனவும் அதன்போது கத்தோலிக்க அருட்தந்தைமார்கள்தெரிவித்தார்கள்.

இந்த தாக்குதலின் உண்மையான ஆரம்பகர்த்தாக்கள் யார் என்பதை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டுமென்பது கறுப்பு ஞாயிறு எதிர்ப்பாளிகளின் அடிப்படை கோரிக்கையாக அமைகின்றது. அத்துடன் அவர்களுக்கு எதிராக எடுக்கக்கூடிய அனைத்து சட்டநடவடிக்கைளையும் தாமதமின்றி எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.அதேவேளையில் சனாதிபதி கடந்த 06 ஆந் திகதி ஊருடன் உரையாடல் (கம சமங்க பிலிசந்தர) பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தான் எவ்விதத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விற்று அதிகாரத்திற்கு வரவில்லை எனக் கூறினார்.

Filed Under: செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை 3-2 என கைப்பற்றியது நியூசிலாந்து

08/03/2021 Leave a Comment

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளும் தலா 2 ஆட்டங்களில் வென்று தொடர் சமனிலையில் இருந்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது. வேட் 29 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 44 ரன்கள் குவித்தார். கேப்டன் ஆரோன் பிஞ்ச் 36 ரன்கள் எடுத்தார்.
அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து 15.3 ஓவர்களில் 143 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. மார்டின் கப்தில் அதிரடியாக ஆடி 46 பந்துகளில் 4 சிக்சர், 7 பவுண்டரியுடன் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கான்வே 36 ரன்னும், பிலிப்ஸ் 34 ரன்னும் எடுத்துள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியவுக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து.

ஆட்ட நாயகன் விருது மார்டின் கப்திலுக்கும், தொடர் நாயகன் விருது இஷ் சோதிக்கும் அளிக்கப்பட்டது.

Filed Under: ஆடுகளம்

மியான்மரில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்களை விடுவித்திடுக…. பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை….

08/03/2021 Leave a Comment

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு, அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ராணுவத்தின் இந்த அராஜக நடவடிக்கையை பல்வேறு நாடுகள் கண்டித்துள்ளன. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களின் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் மியான்மர் போராட்டம் குறித்து செய்தி வெளியிட்டதால் தெய்ன் ஸா உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் பொது சட்ட விதிகளை மீறியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைவரையும் எங்கள் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளக் கேட்டுக் கொள்கிறோம். இதழியல் என்பது குற்றச் செயல்அல்ல. மியான்மரில் ராணுவத்துக்குஎதிராக நடந்த போராட்டத்தைப் பதிவு செய்ததால் கைதுசெய்யப்பட்ட தெய்ன் ஸா உள்ளிட்ட 5 பத்திரிகையாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும்”என்று கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.மியான்மர் ராணுவத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மியான்மரில் இளம் போராட்டக் காரர்கள் எதிர்ப்பு போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Filed Under: உலகம்

ஊழல் கரைமேவிப் பாய்கின்றது

08/03/2021 Leave a Comment

இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவிற்கு 2019 ஆம் ஆண்டில் 3305 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில் மிக அதிகமான எண்ணிக்கையாக 1452 முறைப்பாடுகள் பல்வேறு ஊழல்கள் சம்பந்தமாக கிடைத்தவையாகும்.

இலஞ்சம் வாங்குதல் சம்பந்தமாக 483 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மேலும் பலதரப்பட்ட 1210 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் 264 முறைப்பாடுகள் புலனாய்வு செய்யப்படுவதில்லை என்பதோடு 946 சம்பந்தமாக மேலதிக புலனாய்வுக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதைப்போலவே இலஞ்சம் அல்லது ஊழல் சம்பந்தமான சுற்றிவளைப்புகள் மூலமாக 75 பேர் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்.

Filed Under: செய்திகள்

இலங்கை சம்பந்தமான திருத்திய மனித உரிமைகள் பிரேரணை இன்று

08/03/2021 Leave a Comment

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இதற்கு முன்னர் சமர்ப்பித்திருந்த இலங்கையின் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான விடயங்களை உள்ளடக்கிய பிரேரணை திருத்தியமைக்கப்பட்ட பின்னர் பெரிய பிரித்தானியாவினால் அது இன்று மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இந்த பிரேரணை முன்வைக்கப்பட்ட பின்னர் அது பற்றிய உரையாடலை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 வது கூட்டத்தொடர் கடந்த பெப்புருவரி மாதத்தில் தொடங்கிய பின்னர் அந்தபிரேரணைக்கு சார்பாக இற்றைவரை 38 நாடுகள் விடயங்களை முன்வைத்துள்ளதோடு பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்துகொண்டு 31 நாடுகள் மாத்திரமே விடயங்களை முன்வைத்துள்ளன.இன்றளவில் அயல்நாடான இந்தியாவின் ஒத்துழைப்பு இலங்கைகக்கு கிடைக்கமாட்டாதென்பது உறுதியாகி உள்ளது.

எனினும் இந்தியாவுடன் சேர்ந்து ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஒருசில நாடுகள் வாக்களிப்பிலிருந்து விலகிநிற்க இடமுள்ளதென சர்வதேச பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளார்கள். ஏற்கெனவே உலகில் நிலவுகின்ற அமெரிக்கா மற்றும் சீனாவை முதன்மையாக்கொண்ட அதிகாரப் போட்டியின் மத்தியில் அமெரிக்காவின் உதவிக்காக இந்தியா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா என்பவை கூட்டான பாதுகாப்பு அமைப்பொன்றையும் உருவாக்கியுள்ளன.

Filed Under: செய்திகள்

இப்போது எதற்காக கறுப்புக்கொடி போடுகிறார்கள் – கறுப்பு ஞாயிறு எதிரப்புக்காக கோட்டாபய கோபித்துக் கொள்கிறார்.

08/03/2021 Leave a Comment

உயிர்த் ஞாயிறு தினத்தன்று நடாத்தப்பட்ட இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலை விற்று அதிகாரத்தைப் பெறவில்லையென சனாதிபதி குருணாகல் கிரிபாவயில் நடைபெற்ற ”கம சமங்க பிலிசந்தர – ஊருடன் உரையாடல்” பிரச்சார இயக்கத்தின்போதுகூறினார்.

இந்த சந்திப்பின்போது சனாதிபதி “ஒரு சிலர் கூறுகிறார்கள் நாங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விற்று அதிகாரத்திற்கு வந்தோம் என்று. நாங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குலை விற்று அதிகாரத்திற்கு வரவில்லை. அதற்கு முன்னர் கூட்டுறவுத் தேர்தல்களை வென்றோம். எத்தனை பிரதேச சபைகளை வென்றோம்?” என அங்கு கேள்வி கேட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷவை முதன்மையாகக்கொண்ட நிகழ்கால அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்றுமேற்கொள்ளப்பட்ட அந்த தாக்குதலின் குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை அமுலாக்காமை பற்றி பாரிய வெறுப்பிற்கு இலக்காகி கத்தோலிக்க மக்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களுமே “கறுப்பு ஞாயிறு” எதிர்ப்பில்கலந்துகொண்டிருந்த வேளையிலேயே சனாதிபதி இவ்வாறு கூறினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விற்று அதிகாரத்திற்கு வரவில்லை எனக் கூறியபோதிலும் 07 ஆந் திகதி ஞாயிறன்று நாடு பூராவிலும் அனைத்து மதத்தலைவர்களினதும் மக்களினதும் பங்கேற்புடன் கறுப்பு ஞாயிறு இயக்கம் வெற்றிகரமாகநடைபெற்றதோடு அதற்கு விரிவான பிரச்சாரமும் கிடைத்தது. அவ்வாறு இருக்கையில் அரச ஊடகங்களில் சனாதிபதியின் இந்த கூற்றுக்கு விசேட பிரச்சாரம் வழங்கப்பட்டது.

இதன்போபது குறிப்பாக “உயிர்த்த ஞாயிறு சம்பவம் இடம்பெற்றதும் கறுப்புக்கொடி போடவில்லை. இப்போது ஏன் கறுப்பக்கொடி போடுகிறார்கள். அவற்றை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.” என சனாதிபதி கூறினார்.

Filed Under: செய்திகள்

உரிய தினத்தில் தடுப்பூசிகளை வழங்க இயலாது – இந்திய கம்பெனி கூறுகின்றது.

08/03/2021 Leave a Comment

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் அனுப்பற்கட்டளை பிறப்பிக்கப்பட்ட ஒரு இலடச்சம் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை கோரிய தினத்தில் வழங்க இயலாதென அதன் இந்திய உற்பத்திக் கம்பெனி அறிவித்துள்ளது.

கொவிஷீல்ட் தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்ற சீரம் இன்ஸ்டிரியுட் கம்பெனியின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் அதார் பூனாவல்லா மார்ச்சு மாதம் 3 ஆந் திகதி திடீரென அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பிவைத்துள்ளகடிதத்தில் தமது கம்பெனிக்கு புதிதாக கிடைத்துள்ள கோரிக்கைகள் மற்றும் நிறுவனத்தில் இடம்பெற்ற தீப்பற்றல் காரணமாக மார்ச்சு அல்லது ஏப்பிறல் மாதத்தில் இலங்கைக்கு வழங்க எதிர்பார்த்திருந்த அளவினை வழங்குவது தாமதமடையுமென குறிப்பிட்டுள்ளார்.

அவசியமெனில் தடுப்பூசிகளை வழங்கும் உடன்படிக்கையை இரத்துச்செய்தல் அல்லது செலுத்திய முற்பணத்தை மீளச்செலுத்த இயலுமென சீரம் இன்ஸ்டிரியுட் கம்பெனியின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் மேலும் தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

இலங்கையில் 85 ஆயிரத்து 695 பேர் கொரோனாவால் பாதிப்பு – 502 மரணங்களும் பதிவு!

08/03/2021 Leave a Comment

நாட்டில் மேலும் 359 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று 290 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 59ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில், இன்னும் மூவாயிரத்து 134 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பல்லேகல பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆணொருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி மரணித்தார்.

நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 82 வயதான ஆணொருவர் கொரோனா தொற்று உறுதியான நிலையில் நேற்று மரணித்தார்.

அதேபோல பரவர்தனஓயா பகுதியை சேர்ந்த 72 வயதான ஆணொருவர் கொரோனா தொற்று உறுதியான நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் வைத்து நேற்று மரணித்தார்.

அத்துடன் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 77 வயதான பெண் ஒருவர், தம்பதெனிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 25 ஆம் திகதி மரணித்தார்.

இதேவேளை, கன்னத்தொட்ட பகுதியை சேர்ந்த 67 வயதான ஆணொருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி மரணித்தார்.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 502ஆக அதிகரித்துள்ளது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

இராணுவத்தை பலப்படுத்துகிறது சீனா – இராணுவத்துக்கான பட்ஜெட்டை 6.8 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

07/03/2021 Leave a Comment

சீனா தனது இராணுவத்துக்கான பட்ஜெட்டை 6.8 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதாவது நடப்பாண்டில்  இராணுவத்துக்கான நிதி 250 பில்லியன் டொலர்.


உலகிலேயே இராணுவத்துக்கு அதிகம் செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. 20 லட்சம் வீரர்களை கொண்ட பாரிய இராணுவ கட்டமைப்பாக சீனா காணப்படுகின்றது. கடந்த சில ஆண்டுகளாக சீனா தனது இராணுவத்தில் பல முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.அதாவது வெளிநாடுகளுக்கு இடையே செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் கடற்படை மற்றும் விமானப் படையை விரிவாக்கம் செய்துள்ளது. குறிப்பாக கடற்படையின் போர்க்கப்பல் மற்றும் புதிய வகை நீர்மூழ்கி கப்பல்கள் எனபன இணைக்கப்பட்டுள்ளன

Filed Under: உலகம்

  • « Previous Page
  • 1
  • …
  • 583
  • 584
  • 585
  • 586
  • 587
  • …
  • 603
  • Next Page »

Recent Posts

  • வழக்கு முடியும் வரை ரோஹித போகொல்லாகம விளக்கமறியலில்!
  • ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்!
  • ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
  • முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
  • சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.