இலங்கையில் வாழும் அனைத்து மக்களின் நலன்கருதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் செயற்படவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றைய தினம் (04) தமிழ்ப் பத்திரிகையொன்றிற்கு வழங்கியிருந்த நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இந்த அரசாங்கம் எந்தவொரு திட்டமும் இல்லாத அரசாங்கம் ஆகும். எந்த மக்களின் நலன்கருதியும் செயற்படவில்லை. அதாவது சிங்கள மக்களுக்கு அத்தகைய சிந்தனை வரக்கூடாது என்பதற்காக தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு எதிரானதொரு அரசாங்கமாகச் செயற்படுகிறது. இந்த அரசாங்கமானது நாட்டில் வாழும் எந்த மக்களுக்கும் எந்தவொரு நன்மையையும் செய்யாத அரசாங்கம் என்பது தான் உண்மையாகும்.” என்றார்.
4










