கொழும்பு நகரின் வாயு மண்டலத்திலுள்ள ஒக்சிஜனின் அளவு, சனத் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப படிப்படியாக குறைவடைந்து செல்கின்றமை ஆய்வொன்றின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென சுற்றாடல் அமைச்சு தெரிவிக்கின்றது.
இதன்படி, கொழும்பு நகரில் வளிமண்டலம் மாசடைவதை தவிர்ப்பதற்காக சுற்றாடல் அமைச்சு மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியன இணைந்து வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர, கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க உள்ளிட்டோரின் தலைமையில், சுற்றாடல் அமைச்சில் இந்த வேலைத்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு நகரில் நாளாந்தம் ஒக்சிஜனின் அளவை ஆய்வு செய்யும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1










