அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட 22 ஆவது திருத்தம் விசேட பெரும்பான்மை வாக்களிப்புடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கமைய, 22 ஆவது அரசியல் அமைப்பிலக்கத் திருத்தத்திற்கு ஆதரவாக 158 வாக்குகளும், எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி, இத்திருத்தத்திற்கு ஆதரவாக 95 மேலதிக வாக்குகள் கிடைத்துள்ளதுடன், விசேட பெரும்பான்மைக்குத் தேவையான 150 வாக்குகளையும் தாண்டி வாக்குகள் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
4










