கோட்டா, மஹிந்த மற்றும் ரணிலுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டி!

Basil-Mahinda-Ranil-Gota

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியடைவதற்கு முன்னரே, மிக் (MiG) ரக போர் விமானங்களை கொள்முதல் செய்ததில் சுமார் 7 மில்லியன் டொலர் நிதி மோசடி இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, அப் ஆட்சியின் இரண்டாவது தவணைக்காலத்தில் எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கலில் பல மில்லியன் டொலர் நிதி மோசடி இடம்பெற்றதுடன், ரணில் – மைத்திரி கூட்டு அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டு 45 நாட்களுக்குள் மத்திய வங்கி பிணைமுறி கொள்ளையும் மேற்கொள்ளப்பட்டது.

ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் ஒருவரை ஒருவர் பாதுகாத்துக் கொண்டு, இந்த நிதிச் குற்றங்கள் மறைக்கப்பட்டிருந்தன. எனினும், தற்போது இந்நிதி குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மிக் விமான நிதி மோசடி தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக 2,300 மில்லியன் டொலர் பெறுமதியான புரிந்துணர்வு ஒப்பந்தம் 2013 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது. அதனூடாக 1,000 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதி மோசடியை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில், அக்கொடுக்கல் வாங்கலை ரத்து செய்வதாகக் கூறி 200 மில்லியன் டொலருக்கும் அதிகமான இழப்பீட்டுத் தொகையைச் செலுத்தும் போர்வையில் மற்றுமொரு நிதி குற்றமும் இழைக்கப்பட்டது. இத்தகவல்களை வெளிப்படுத்திய ஊடகவியலாளர் ராஜீவ் ஜயவீர டொரிங்டன் சதுக்கத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துகிடந்ததுடன், அத்தகவல்கள் குறித்து வாக்குமூலம் அளித்த கபில சந்திரசேனவும் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்