முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் P.B. ஜயசுந்தரவிடம் இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரிகள் சுமார் நான்கு மணிநேரம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிக்கவரட்டிய பகுதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து இந்த வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




