Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

பிரேசில் கடந்த 24 மணி நேரத்தில் 90,570 பேருக்கு கொரோனா பாதிப்பு

21/03/2021 Leave a Comment

பிரேசிலில் ஓரே நாளில் 90,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 90,570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,71,390 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் , ஒரே நாளில் 2,185 பேர் கொரோனா பாதிப்பில் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,90,314 ஆக உயர்ந்துள்ளது.

Filed Under: உலகம், கொவிட்-19 செய்திகள்

ஒன்றரை வருட காலப்பகுதியில் 30 வாகன விபத்துகள்… ஊவா மாகாணத்தில் பதிவு

21/03/2021 Leave a Comment

ஊவா மாகாணத்தில் கடந்த ஒன்றரை வருட காலப்பகுதியில் 30 வாகன விபத்துகள் இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உலகளவில் ஏற்படும் மரணங்களில் வாகன விபத்தினால் ஏற்படும் மரணம் 09 ஆவது இடத்தில் காணப்படுவதுடன், வாகன விபத்துக்களில் மரணிப்பவர்களின் உலக நாடுகள் வரிசையில் இலங்கை 96 ஆவது இடத்தில் உள்ளது. இலங்கையில் ஏற்படும் மரணங்களின் வரிசையில் வாகனவிபத்து 10 ஆவது இடத்தில் காணப்படுகிறது.

அண்மைக்காலமாக இலங்கையில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளதுடன் நாளொன்றுக்கு ஏறக்குறைய 15 -20 பேர் உயிரிழந்துள்ள சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 

நேற்றைய தினம் (20) மொனராகலை – பதுளை வீதியில் 13 ஆவது மைல்கல்; என்ற இடத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். விபத்து நடந்த குறித்த இடத்தில் இருவாகனங்கள் செல்லமுடியாத நிலை காணப்பட்டதுடன், வீதி ஓரத்தில் சரிந்து விழுந்திருந்த கற்பாறை பல மாதகாலமாக அகற்றப்படாமல் இருந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Filed Under: செய்திகள்

ரூபா. 1000 இன்னமும் கிடைத்தபாடில்லை… கோப்பி உற்பத்தி பற்றி கோட்டா கதைக்கிறார்.

21/03/2021 Leave a Comment

பெருந்தோட்ட மக்களின் 1000 ரூபாய் சம்பள விவகாரத்தை ஆளும்தரப்பும், கம்பெனிகளும் இழுத்தடித்துக்கொண்டுவரும் நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் கோப்பி பயிர்செய்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று (20) நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு சொந்தமான யோம்புவெல்தென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்“ நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இதுகுறித்து, உலகில் சுவையான கோப்பி வகைகளில் நான்காவது இடத்தில் கொப்பிரியா, எரபிக்கா, லக்பெரகும் உள்ளது என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதற்கு பொருத்தமான சூழலும் காலநிலையும் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளது. அந்த கோப்பி செய்கையை மாவட்டத்தில் அதிகரிப்பதற்கு அதிக கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டங்கள் பலதேசியக் கம்பெனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்தவிடத்தில் கோப்பி உற்பத்தி குறித்து ஜனாதிபதி அவர்கள் யாரை சார்ந்து கருத்து வெளியிட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

1000 ரூபா சம்பளத்திற்கு வர்த்தமானி அறிவித்தல் மூலமாக அரசாங்கம் அனுமதி வழங்கிய போதும், அரசாங்கத்தின் குறித்த வர்த்தமானி அறிவித்தலை தற்காலிகமா இடைநிறுத்துமாறு கோரி முதலாளிமார் சம்மேளனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. 

“மூன்றில் இரண்டு அதிகாரம் கொண்ட அரசாங்கமும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும், தோட்டத் தொழிலாளர்களின் அதிக விருப்பு வாக்குகளை பெற்ற வெவண்டன் தோட்ட உரிமையாளரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் கம்பெனியினரின் இந் நடவடிக்கைக்கு எதிராக குரல் உயர்த்தாமல் இருப்பது எதனால்? மற்றும் அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு என்னவாயிற்று?” என்ற கேள்வி எழுகிறது. 

Filed Under: செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து மகிந்த ராஜபக்ஷவிடம் விசாரிக்க வேண்டும் – பிமல் ரத்நாயக்க

21/03/2021 Leave a Comment

மகிந்த ராஜபக்ச தனது ஆட்சிக்காலத்தில் ஜஹ்ரான் ஹாசிமிற்கு சம்பளம் வழங்கியமை குறித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“தனது ஆட்சிக்காலத்தில் ஜஹ்ரான் ஹாசிம் உட்பட 21 பேருக்கு சம்பளம் வழங்கியமைக்காக மகிந்த ராஜபக்சவை விசாரணை செய்யவேண்டும். ரத்வீரசேகர முகமட் இப்ராஹிம் குறித்து தகவல்களை சேகரிக்கின்றார் என்றால், அவர் மகிந்த ராஜபக்சவிடமிருந்து ஜஹ்ரானிற்கும் ஏனையவர்களிற்கும் சம்பளம் வழங்கியமை குறித்து வாக்குமூலத்தை பெறவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டவர்களின் தந்தையான வர்த்தகருக்கு மகிந்த ராஜபக்ச விருது வழங்கிய பின்னரே அவரை மக்கள் விடுதலை முன்னணி தேசியப்பட்டியலிற்கு நியமித்தது. ஜனாதிபதியாகயிந்த காலப்பகுதியில் மகிந்த ராஜபக்ச வர்த்தகருக்கு விருதுகளை வழங்கியிருந்தார் அதனை கருத்தில் கொண்டே அவரை தேசியப்பட்டியலில் நியமிப்பதற்கு எமது கட்சி முடிவு செய்தது.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Filed Under: செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையை இழுத்தடிக்கிறது அரசாங்கம் – சர்வதேச நீதிமன்றம் செல்ல பேராயர் தீர்மானம்…

12/03/2021 Leave a Comment

“குறைபாடுகள் நிறைந்திருக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை வைத்துக்கொண்டு அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்குமானால் நாம் சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாட நேரிடும்.” என்று பேராயர் மெல்கம் ரஞ்சித் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்ததாவது,

“ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை வைத்துக்கொண்டும், அதனை ஆராய இன்னொரு ஆணைக்குழுவை நியமித்துக்கொண்டும் அரசாங்கம் காலத்தை இழுத்தடிக்கக் கூடாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நாட்டு மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தருவோம் என்று நாட்டு மக்களுக்கு அரசாங்கம் உறுதியளித்திருந்தது. எனவே குற்றவாளிகளை பாதுகாக்கும் விதத்தில் அரசாங்கம் செயற்படக்கூடாது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த மாட்டோம் என அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியவர்கள், அதற்கு நிதியுதவி வழங்கியவர்கள், மறைமுக ஒத்துழைப்பு வழங்கியவர்கள் போன்றோர் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடாத்த வேண்டும்.” என தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

சொந்த கிராமத்திற்குச் சென்ற மக்களை தடுத்தனர் இராணுவத்தினர்… உறுதி ஆவணங்களை வைத்திருக்கின்ற போதும் கிராம மக்களுக்கு அனுமதி இல்லை…

12/03/2021 Leave a Comment

வவுனியா, வடக்கு நெடுங்கேணி  வெடிவைத்தகல் கிராமத்திற்குள் மக்கள் உட்செல்ல இராணுவத்தினரும், வனவள திணைக்களத்தினரும் தடைவிதித்துள்ளதாகவும், தம்மிடம் தமது காணிகளுக்கான உறுதிப்பத்திரம் காணப்படுகின்றபோதிலும் அதற்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதிகுள் உட்செல்வதற்கோ காணிகளை துப்புரவு செய்யவோ இராணுவமும், வனவள திணைக்களத்தினரும் தடை செய்து வருகின்றார்கள். 

வெடிவைத்தகல் கிராமத்தில்  இராணுவத்தினர் முகாம் அமைத்து இருப்பதனால் குறித்த பகுதியில் மக்கள்  உட்சென்று துப்பரவு பணிகளை மேற்கொள்ள தொடர்ந்தும் தடைவிதித்து வருகின்றனர். 

இக் கிராமத்தில் ஆரம்பத்தில் 65 குடும்பம் வசித்து வந்த நிலையில் தற்போது  15 குடும்பத்தினர் இக்கிராமத்தில் உள்ள தமது சொந்த காணிக்குள் குடியேறுவதற்கு  கிராம சேவையாளர், பிரதேச செயலாளரின் அனுமதி கடிதத்தினை இராணுவம், வனவளதிணைக்களத்தினருக்கு வழங்கியிருந்தும், கிராமத்தில்  உள் நுழைவதற்கான அனுமதி பத்திரத்துடன்  குறித்த பகுதியில் உள்ள தம் சொந்த காணிகளினை துப்பரவு செய்ய  சென்ற போது இராணுவத்தினர்  குறித்த கிராமத்திற்குள் உட்செல்ல தடைவிதித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டிலிருந்து குறித்த பகுதிக்குள் பொதுமக்கள்  உட்செல்ல இராணுவத்தினர்  தடை விதித்த நிலையில் இது தொடர்பாக வவுனியா  மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலீபனிடம்  இது தொடர்பாக  முறையீடு செய்த போது  இவ்விடயம்  தொடர்பாக உரிய தீர்வினை பெற்றுதருவதாக எமக்கு  கூறியிருந்தும்  இதுவரை  எமக்கான நீதி  கிடைக்கவில்லை என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Filed Under: செய்திகள்

சீனி வரி மோசடி… 15.9 பில்லியன் ரூபாய் வருமான இழப்பு… சுனில் ஹந்துன்நெத்தி உயர்நீதி மன்றில் மனு

12/03/2021 Leave a Comment

சீனி வரி மோசடி குறித்து சுனில் ஹந்துன்நெத்தி உயர்நீதி மன்றில் மனு தாக்கல் செய்துள்ளார். 

சீனி இறக்குமதியின் போது 15. 9 பில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற் படுத்தப்பட்டுள்ளமை குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய் துள்ளார்.

சீனி இறக்குமதிக்கான வரி 50 ரூபாயாக இருந்ததுடன் அந்த வரி 2020 ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையான காலத்தில் 25 சதமாக குறைக்கப்பட்டால், ஆயிரத்து 590 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இது இலங்கை வரலாற்றில் நடந்த மிகப் பெரிய வரி மோசடி எனவும் சுனில் ஹந்துன்னெத்தி முன்னர் குற்றம்சாட்டியிருந்தார்

Filed Under: செய்திகள்

மார்ச் 26-ம் திகதி ‘பாரத் பந்த்’: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

11/03/2021 Leave a Comment

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் 26-ம் திகதி முதல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.


இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக, கடந்த ஜனவரி 26-ம் திகதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியிலும் கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்துக்கு பின்னர் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இந்நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடங்கி வரும் 26-ம் திகதியுடன் 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன. இதனைக் குறிக்கும் விதமாக, அன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய சங்கங்கள் நேற்று அறிவித்தன. அத்துடன், வரும் 15 ஆம் திகதியன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வர்த்தக சங்கங்களும் டெல்லியில் விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

Filed Under: உலகம்

மியான்மார் இராணுவத் தலைவரின் மகன், மகள் மீது பொருளாதார தடை – அமெரிக்கா

11/03/2021 Leave a Comment

மியான்மார் இராணுவத் தலைவர் மின் ஆங் லேங்கின் மகன், மகள் மீதும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 6 நிறுவனங்களுக்கும் எதிராக அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.

மியான்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டங்கள் வலுத்து வருகிறது. உலகில் உள்ள பல நாடுகள் மியான்மார் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியீட்டு வருகின்றனர். 

இந்நிலையில் மியான்மார் இராணுவத் தலைவர் மின் ஆங் லேங்கின் ஆங் பே சோன் (Aung Pyae Sone), கின் திரி தெட் மொன் (Khin Thiri Thet Mon) மகன், மகள் இருவர் மீதும், அவர்கள் கட்டுபாட்டி உள்ள 6 நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில்க் கூறியதாவது,

அமைதியாக போராட்டம் நடத்தப்பட்டவர்கள் மீது இராணுவம் கடுமையாக தாக்கியது ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை தொடர்ந்து ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று, சுமார் 200 க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். 

மேலும் தற்போது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளைத் தொடர்ந்து கூடுதலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் (Antony Blinken) எச்சரித்துள்ளார்.
 

Filed Under: உலகம்

ஏ9 வீதி மறிக்கப்பட்டது… யாழில் தீவிரமடைந்தது சுகாதார தொண்டர்கள் போராட்டம்…

11/03/2021 Leave a Comment

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தைச் சீர்செய்ய யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தியாலும் கச்சேரி – நல்லூர் வீதியாலும் பொலிஸார் மாற்றுப் பாதைகளில் வாகனங்களை அனுப்பி வைக்கின்றனர்.

தமக்கு வழங்கப்பட்ட நிரந்த நியமனம் இடைநிறுத்தப்பட்ட நிலையில் அதனை மீளப் பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதார தொண்டர்கள் வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கடந்த முதலாம் திகதி தொடக்கம் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவர்களது போராட்டம் உணவுதவிர்ப்பு போராட்டமாக விரிவாக்கமடைந்துள்ளது.

இந்த நிலையிலேயே அவர்கள் இன்று முற்பகல் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2019ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு சுகாதார பணியாளர்கள் நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது .

எனினும் குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நிரந்தர நியமன கடிதம் பெற்ற சுகாதார பணியாளர்கள் 454 பேர் தமக்கு உரிய தீர்வினை வழங்குமாறு கோரியே வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

IBC செய்திகளில் தகவல் பெறப்பட்டது 

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 581
  • 582
  • 583
  • 584
  • 585
  • …
  • 604
  • Next Page »

Recent Posts

  • கிரேக்க பிணைமுறி வழக்கு: கப்ரால் தனது மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றார்!
  • முன்னாள் பிரதான நீதவான் திலின கமகே பதவியிலிருந்து நீக்கம்!
  • தலதா அதுகோரல திடீரென ஆவேசம்: ஷானி அபேசேகர மீதும் தாக்குதல்!
  • ஷிரந்தி ஓரங்கட்டப்பட்டார்: ஷிரந்தி ராஜபக்ஷ மொட்டு கட்சியின் உறுப்பினரல்லர் என சாகர காரியவசம் அறிவிப்பு!
  • கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது – இந்திய உயர் நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.