முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரானந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அவருடன் ரோஹித ராஜபக்ஷவின் மாமியார் ஆன் டி லிவேரா (Anne de Livera) என்பவரும் சென்றுள்ளதுடன், இவர்கள் இன்று அதிகாலை 01.10 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான SQ-469 என்ற விமானம் மூலம் இவ்வாறு பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரானந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக வரும் 24ஆம் திகதி பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த பின்னணியில், அவர் இவ்வாறு வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.








