Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka

Unbiased, Unstoppable

  • முகப்பு
  • செய்திகள்
  • கொவிட்-19
  • உலகம்
  • ஆடுகளம்
  • கட்டுரைகள்
  • සිංහල
  • English

ஏ9 வீதியை மறித்து போராடிய கரந்தாய் மக்கள்!

16/02/2021 Leave a Comment


கிளிநொச்சி – பளை, கரந்தாய் பகுதியில் தென்னை பயிர்ச் செய்கை சபையால் உரிமை கோரப்பட்ட நிலையில் மக்களிடம் கையளிக்க அறிவுறுத்தப்பட்ட காணியில் தற்காலிகமாக வசித்த மக்களின் கொட்டகைகளை குறித்த சபையினர் பொலிஸாரின் பாதுகாப்புடன் உழவியந்திரம் மூலம் இடித்து அகற்றி, அங்கிருந்தோரை வெளியேற்றியுள்ளனர்.

நேற்று (15) இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பளை, கரந்தாய் கிராமத்தில் 1976ம் ஆண்டு மக்கள் குடியேறிய இருந்தனர். அதன்பின் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு சென்ற மக்கள் போர் நிறைவடைந்ததன் பின்னர் 2010ம் ஆண்டு மீண்டும் கரந்தாய் கிராமத்தில் குடியேறியிருந்தனர்.


அவ்வாறு குடியேறியிருந்த காணியை தமக்குரியது என தெரிவித்த தென்னை பயிர்ச்செய்கை சபையினர், 2015ம் ஆண்டு மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றியிருந்தனர்.


இதனையடுத்து மக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பயன் கிடைக்காத நிலையில் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.
இதன் பயனாக மக்களுடைய காணிகளை இரு வாரங்களுக்குள் மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு கடந்த வருடம் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.


இந்நிலையில் காணிகளை மக்களிடம் கையளிக்குமாறு பல தடவைகள் மனித உரிமைகள் ஆணைக்குழு உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் தமது தீர்வினை தாமே பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தமது காணிகளிற்குள் உள்நுளைந்து கடந்த இரண்டு மாதமாக தற்காலிக கொட்டில்களை அமைத்து வசித்து வருகின்றனர்.


இன்றைய அங்கு சென்ற தென்னை பயிர்ச் செய்கை சபையினர் பொலிஸாரின் பாதுகாப்புடன் மக்களின் தற்காலிக கொட்டகைகளை உழவியந்திரம் மூலம் இடித்தழித்து, மக்களை வெளியேற்றினர்.


இவ்வாறு இடிக்கப்பட்ட கொட்டகைகளை மற்றும் தூக்கி வீசப்பட்ட வீட்டு பாத்திரங்களை ஏ9 வீதியில் போட்டு வீதியை மறித்து பாதிக்கப்பட்டோர் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.


போராட்டத்தின் காரணமாக ஏ9 வீதி சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேல் முடக்கப்பட்டத. அதன்பின்னர் குறித்த இடத்திற்கு சென்ற பளை பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.


கலந்துரையாடலின்போது தென்னை பயிர் செய்கை சபையினரால் அழிக்கப்பட்ட கொட்டகைகளை மீண்டும் அமைத்துத் தருவதற்கு ஏற்பாடு செய்வதாக மக்களுக்கு பொலிஸார் வாக்குறுதி வழங்கியதால் போராட்டம் கைவிடப்பட்டது.


இதேவேளை இந்த காணி தொடர்பில் நீதிமன்ற வழக்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

– உதயன் செய்திகள் 

Filed Under: செய்திகள்

திண்டாட்டத்தில் பண்டிகை காலம்… அரிசியின் விலை கூட்டப்படலாம்…

16/02/2021 Leave a Comment

பண்டிகை காலம் அண்மிக்கின்ற போது அரிசியின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பெரும் போகத்தில் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், பாரிய அளவிலான ஆலை உரிமையாளர்களும், நெல்லை கொள்வனவு செய்பவர்களும் கடந்த ஆண்டுகளைப்போல நெல்லை பதுக்கி வைக்கும் அபாயம் உள்ளதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பீ.கே ரஞ்சித் இதனை இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

Filed Under: செய்திகள்

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை சாத்தியம்… கடற்பிரதேசங்களில் காற்றின் வேகமும் அதிகரிக்கும்…

16/02/2021 Leave a Comment

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்று வளிமண்டல திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் வானிலை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை…

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை நிலைமை: மட்டக்களப்பிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை: கொழும்பிலிருந்து புத்தளம் வரையானமற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

Filed Under: செய்திகள்

16/02/2021 Leave a Comment

Virakesari Cartoon

https://lankatruth.com/ta/?p=110

Filed Under: Cartoons

மேலதிக வகுப்புகளுக்குத் தடை … 23ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுல்…

15/02/2021 Leave a Comment

எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

Filed Under: செய்திகள்

மக்களுக்கு வழங்க முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் – 19 தடுப்பூசி…

15/02/2021 Leave a Comment

அரச சுகாதாரப்பிரிவு மற்றும் தெரிவு செய்யப்பட பாதுகாப்புப் பிரிவு அங்கத்தவர்களுக்குப் பின்னர் கொரோனா தடுப்பூசி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

அதன்படி, இம்மாதம் 16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் இராணுவ வைத்தியசாலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட பிரசைகளுக்கு தடுப்பூசி வழங்கப்படும்போதே, அவ் எல்லை வயதுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பொசி வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

Filed Under: கொவிட்-19 செய்திகள், செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தின் மிகப்பெரிய முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவோம் – வெளிவிவகார அமைச்சரே சாட்சி

15/02/2021 Leave a Comment

கொழும்புத் துறைமுகத்தின் பிகப்பெரிய முனையமான மேற்கு முனையைத்தை இந்தியாவுக்கு வழங்குவதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார்.

இந்தியாவின் NEWS 18 தொலைக்காட்ட்சி அலைவரிசையுடன் மேற்கொண்ட கலந்துரையாடலிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் கொள்கலன் நடவடிக்கைகள் இம்முனையத்தில் இடம்பெறுவதாக நாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Filed Under: செய்திகள்

இறக்குவானையில் வங்கியொன்று மூடப்பட்டது…

15/02/2021 Leave a Comment

இறக்குவானை நகரில் உள்ள அரச வங்கியின் பணியாளருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வாங்கி இன்று  முதல் (15) மூடப்படுகிறது.

கோடகவலை சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகம் இது தொடர்பில்,
பாதிக்கப்பட்ட நபர் தற்போது தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் தெரிவித்தது.

Filed Under: செய்திகள்

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 249 ஓட்டங்களால் முன்னிலை…

15/02/2021 Leave a Comment

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 249 ஓட்டங்களில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.

நேற்று 2ஆவது நாள் ஆட்டம் நடந்த போது மதிய உணவு இடைவேளைக்கு முன்பு இந்திய அணி முதல் இன்னிங்சில் 95.5 ஓவர்களில் மொத்தமாக 329 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 59.5 ஓவர்களில் 134 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்நது.

195 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2ஆவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 54 ஓட்டங்கள் எடுத்தது.

இன்று 3ஆவது நாள் ஆட்டம் நடைபெறும். இந்திய அணி இதுவரை 249 ஓட்டங்களில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Filed Under: ஆடுகளம்

இந்தியாவின் ஆதரவை ஜெனிவாவில் பெறவே வடக்கின் 3 தீவுகள் சீனாவுக்கு: சி.வி.விக்னேஸ்வரன்

15/02/2021 Leave a Comment


ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கின் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளன எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.


வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீன நிறுவனம் ஒன்றுக்கு மின்சக்தி உற்பத்திக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


“அண்மையில் ஒரே நாளில் இரு வேறு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஒரே நாளில் அரசு இரண்டு வேறுபட்ட தீர்மானங்களை எடுத்துள்ளது. கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்க முடியாது என அறிவித்துள்ளது. அதேபோல வடக்கு மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவு ஆகிய மூன்றையும் சீனக் கம்பனிக்கு மின்சக்தி தயாரிப்பதற்காக கொடுப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள். இது மிகவும் பாரதூரமான விடயமாகும்.


முதலாவது இந்தியாவுக்கு கிழக்கு முனையத்தைக் கொடுக்காமை சம்பந்தமாக இந்தியா பார்த்துக்கொள்ளும். ஆனால் வடக்கு மாகாணத்திலுள்ள மூன்று தீவுகளைக் கொடுப்பது என்பது எமது வடமாகாண பாதுகாப்புக்கு மிகவும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதுஎனது கருத்து.


தற்போதைய அரசு இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டு இந்தியாவை கோபப்படுத்துவதற்காகச் செயற்படுகின்றார்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தின்படி எமது பகுதி காணிகளை ஜனாதிபதி வழங்குவதாக இருந்தால்கூட அது மாகாண சபையின்ஊடாக செய்யப்பட வேண்டும் என்று இருக்கின்றது. எனினும் மாகாண சபையுடன் எந்தவித ஆலோசனையும் நடத்தாமல் அதற்குப் பதிலாக ஆளுநரின் ஊடாக அதற்குரிய அனுமதியைப் பெற்றுச் செய்வது மிகவும் சட்டத்துக்கு முரணானது.
எமது தமிழ்ப் பிரதிநிதிகளும் இது தொடர்பில் தமது தீர்மானத்தைத் தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. எதிர்காலத்தில் எமது சந்ததியினருக்கு இதனால் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நிலை காணப்படுகின்றது.


இந்தியாவிலிருந்து 49 கிலோ மீற்றர் தூரத்திலே உள்ள தீவுகளை இவ்வாறு வேறு ஒரு நாட்டுக்குக் கொடுப்பது என்பது பாரதூரமான விடயமாகும். அதேபோல் இலங்கை அரசு இதனைத் தெரியாமல் செய்யவில்லை.தெரிந்துகொண்டுதான் செய்கின்றது. அதாவது ஜெனிவாவில் இந்தியாவுடைய ஆதரவைத் தாங்கள் பெறுவதற்காக இவற்றை நிறுத்துவதாக இருந்தால் நீங்கள் எங்களுக்கு ஜெனிவாவில் நன்மைகள் பெற்றுத் தர வேண்டும் என்ற அடிப்படையிலும் இவற்றைச் செய்கின்றார்கள் என்பது எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.


– தினக்குரல் செய்திகள் 

Filed Under: செய்திகள்

  • « Previous Page
  • 1
  • …
  • 596
  • 597
  • 598
  • 599
  • 600
  • 601
  • Next Page »

Recent Posts

  • மூலோபாய எண்ணெய் இருப்புகளை சந்தைக்கு விடுவிக்க G7 நாடுகள் தீர்மானம்!
  • கிரேக்க பிணைமுறி வழக்கில் கப்ரால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு நாளை!
  • இம்மாதமும் லினாட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!
  • பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை ஒருநாள் குழாம் அறிவிப்பு!
  • பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான இலங்கை ஒருநாள் குழாம் அறிவிப்பு!

Recent Comments

  • Harani on பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு…
  • Aagash on செவ்வந்தியை கைது செய்த ரொஹான் ஒலுகலவிற்கு தொலைபேசியில் ஜனாதிபதி பாராட்டு…
  • P.GNANAPRAGASOM on குட்டித் தேர்தலை இப்போதே நடத்த வேண்டாம் – பயத்தில் பதறிய ரஞ்சித் மத்தும பண்டார
  • Thamil Selvan on பாடசாலை மாணவர்களுக்கு அஸ்வெசும திட்டத்தின் கீழ் 6000 ரூபா – அரசாங்கம் அறிவிப்பு
  • SARINIGAR on அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது துப்பாக்கிச்சூடு: நடந்தது என்ன?

English செய்தித்தாள்கள்

  • Sri Lanka Mirror
  • Daily Mirror
  • Lanka News Web
  • Lanka Business Online

பிற வலைத்தளங்கள்

  • Unions Lnaka
  • Left Library
  • Left Magazine
  • SYU Sri Lanka

தமிழ் செய்தித்தாள்

  • Virakesari
  • Thinakkural
  • Tamil Mirror
  • New Uthayan
  • Vidivelli
  • Ada Derana – Tamil

வீடியோ

  • வீடியோ
  • A5News Youtube Channel
  • JVP Newsroom

© Copyright 2002 - 2021 Lanka Truth - Most Reliable Latest News from Sri Lanka. All Rights Reserved.