“அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்படும் அரசியல் தலைவர்களை மௌனிக்க செய்வதற்கும் அவர்களது எதிர்ப்பை சமாளிப்பதற்காகவும் நீதியற்ற முறையில் செயற்பட்டு அரசாங்கமே அவர்களது முகங்களில் சேற்றைப் பூசிக்கொண்டுள்ளது.” என்று முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் இது குறித்து…
“அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை பயன்படுத்தி அரசாங்கம் எனது குடியுரிமையை நீக்க முயற்சிக்கிறது.” என்றார்.
இதன்போது, “20 இற்கு ஆதரவாக வாக்களித்த உங்களது கட்சிக்காரர்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?” என்று ஊடகவியலாளர்கள் மத்தியில் இருந்து எழுப்பப்பட்டக் கேள்விக்கு அவர்…
“ஜனாஸா தொடர்பில் எங்களது வேண்டுகோளை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. 20 இற்கு வாக்களித்தவர்கள் எதிர்வரும் தேர்தலில் அனுபவிப்பார்கள்” என்று தெரிவித்தார்.