மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் தீர்மானத்தை கைவிடுமாறு ஜனாதிபதிக்கு விடுத்துள்ள கோரிக்கைக்கு இதுவரையில் சாதகமான பதில் கிடைக்கவில்லை என அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பிரதான செயலாளர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பாதுகாக்கின்ற போராட்டத்தில் வெற்றி பெற்றோம். துறைமுக தொழிற்சங்கங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு அரசாங்கம் முறையற்று செயற்படுகிறது. இந்திய நிறுவனத்துக்கு கிழக்கு முனையத்துக்கு பதிலாக மேற்கு முனையத்தை வழங்க வேண்டிய தேவை கிடையாது. மேற்கு முனையம் குறித்து தொழிற்சங்கத்துடன் நாளை (20) பேச்சு வார்த்தையை முன்னெடுக்கவொள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.