உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழிருந்த மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் அனைத்தும் கடந்த 16ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் சமல் ராஜபக்ஷவிடமிருந்து நீக்கப்பட்டு, காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழில்முயற்சி காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவிடம் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், மீண்டும் ஏற்கனவே சமலிடம் இருந்த இராஜாங்க அமைச்சு இரண்டாக்கப்பட்டு, குறித்த இரண்டு அமைச்சுக்களுக்குமான இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நேற்றைய தினம் (18) கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.