குற்றவாளியைத் தப்பிக்கவிட்டு பாதிக்கப்பட்டவரைத் தண்டித்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல்…

easter attack - article

இன்னும் நீங்கள் நியாயத்தைத் தேடுகின்றீர்கள். உனது முஸ்லிம் தீவிரவாதக் கொலைகாரன் பல வருடங்களாக இந்த நாட்டில் ஆயுதக் குழுக்களைத் திரட்டியிருந்தான். முஸ்லிம் சமூகத்தினர் அவர்களைப் பற்றி அடிக்கடி அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார்கள். ஆனால் தொடர்ந்தும் அந்தத் தீவிரவாதக் குழுக்களுக்கு அரசாங்கத்தின் அனுசரணை கிடைத்துள்ளது.

தாக்குதல் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் முதல் தாக்குதல் நடைபெறும்போது கூட அன்றைய அரசாங்கம் அறிந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றது.

சாதாரண குடிமக்கள் செய்யும் குற்றச் செயல்களின் ஆதி மூலத்தைக் கண்டுபிடித்தாலும் அரசாங்கத்தின் அனுசரனையுடன் நடைபெறும் குற்றங்களுக்கான பொறுப்புதாரிகள் ஒருபோதும் வெளிப்படுத்தப்பட மாட்டார்கள். ஏனெனில், ஆட்சியாளர் என்போர் ஒரே குழுவினர் ஆவர்.

மக்களின் சந்தோஷங்களும் சோகங்களும் அரசியல் பிரச்சாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டாலும் ஒருபோதும் நியாயம் கிடைக்கப்போவதில்லை.இன்றைய அரசாங்கத்திடம் நான் எதிர்பார்க்கும் விடயம் என்னவென்றால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பங்களிப்பு செய்தவர்களையும் அரச அனுசரனையை வழங்கியவர்களையும் தோலுரித்துக் காட்ட வேண்டும். அதுதான் மரணித்தவர்களுக்குக் கிடைக்கும் சமூகப் பெறுமானமாகும். அவர்களின் உயிர் துறப்பு நியாயமுள்ள சமூகமொன்றில் முடிவுற வேண்டும். சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை நிரூபிக்க வேண்டும்.அரசியல் ரீதியாக எவ்வளவு வேறுபட்டாலும் தற்போதைய ஜனாதியிடம் நான் வைத்திருக்கும் ஒரேயொரு எதிர்பார்ப்பு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புபட்ட நெத்தலி மீனிலிருந்து திமிங்கிலம் வரை அனைவரையும் வெளிப்படுத்துவதாகும். அவர் அதை செய்யவில்லை என்றால், தான் அதிகாரத்துக்கு வருவதற்கு பயன்படுத்திய இன்னுமொரு நாடகமாக உயிர்த்த ஞாயிறு சம்பவம் வரலாற்றில் இடம்பிடித்துவிடும்.பல்வேறு சமூகங்களை பிரித்து வேறுபடுத்துவதற்கு இதுபோன்ற தந்திரங்கள் வரலாறு முழுவதும் பாவிக்கப்பட்டுள்ளன. இந்த பிரிவினையை தடுத்து நிறுத்துவதற்கு இருக்கும் ஒரேயொரு வழிமுறை; சட்டத்தின் நியாய ஆட்சி மட்டும் தான்.

சதுரங்க அபேசிங்க (Chaturanga Abeysinghe)


பிரதியை எழுதிய – திட்டமிட்ட – இயக்கிய கைகள் மறைவானவை அல்ல.அக் கைகள் தான் அதிகாரத்தைப் பிடிப்பதற்கு சந்தர்ப்பம் தேடிய ராஜபக்ஷகளும், வங்குரோத்து அரசியலினால் நடைபெற்ற ஊழல் மோசடிகளை மூடிமறைப்பதோடு பாதுகாப்பைப் பெறுவதற்காக மொத்த நாட்டையே காட்டிக்கொடுத்த ரனில் உட்பட ஐக்கிய தேசிய கட்சியும், இவர்களுடன் இணைந்துகொண்ட மைத்திரீபால சிரிசேனயும்.இந்த முக்கூட்டு சேர்ந்து உருவாக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், நாட்டில் ஏற்பட்ட அரசியல் சமூக நிலைமையில் ஏமாற்றம் அடைந்த 69 இலட்சத்தின் (மொட்டுக்கு வாக்களித்த) ஒவ்வொருவரும் தெரிந்தோ தெரியாமலோ உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இரத்தத்தை தமது கைகளில் தடவிக்கொண்டனர

தர்ஷண டயஸ் (Darshana Dias)


வேண்டுமென்றே தெரிந்துகொண்டு குண்டு வெடிக்கச் செய்து தோல்வியடைவதற்கு ரனிலுக்கு பைத்தியம் கிடையாது. மைத்திரீபாலயும் ராஜபக்ஷகளும் நிச்சயமாக இதை அறிவார்கள்.நாமல் குமாரவின் (மைத்திரீபால ஜனாதிபதியைக் கொலை செய்யும் சதி நடைபெறுவதாகக் கூறியவன்) வௌியிட்ட ஒலிநாடாக்கள் நினைவிருக்கின்றதா? மைத்திரிபால மஹிந்தவை பிரதமராக்கியவுடன் கூறினான், “தொடர் குண்டுகளை வெடிக்கச் செய்தாவது அரசாங்கத்தைக் கவிழ்ப்போம்”.சஹரானைப் பிடிப்பதற்கு பின்தொடர்ந்த நாலக சில்வா (முன்னாள் பொலிஸ் மா அதிபர்) பதிவியில் இருந்து நீக்கப்படுகின்றார். தாக்குதலுக்கு மறுதினம் கோதாபய இலங்கைக்கு வந்திறங்குகினார

தினேஷ் காஞ்சன (Dinesh Kanchana)


“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றவுடன், அப்போதைய ரனில் – மைத்திரீ அரசாங்கத்துக்கும் எதிர்கட்சியில் இருந்த ராஜபக்ஷகளுக்கும் தெரிந்துதான் இத் தாக்குதல் நடைபெற்றது என்ற குற்றச்சாட்டு நாடளாவிய ரீதியில் வேகமாகவும் உறுதியாகவும் எழுந்தன.

உடனே, முஸ்லிம் பெண்களின் ஆடை பர்தா – அபாயா பாதுகாப்புக்கு அச்சுருத்தல் என்ற கருத்து இனவாத ஊடகங்களின் உதவியுடன் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன. அனைவருடைய கவனமும் குற்றஞ்சாட்டப்பட்ட அரசியல் அணிகளில் இருந்து திசை திரும்பி பர்தாவின் பின்னால் சென்றது.இவ்வாறுதான், அரசியல்வாதிகள் தமக்கு பாதிப்பு வரும்போது மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காக புதிய பிரச்சினைகளை உருவாக்குவார்கள்”.

கல்கந்தே தம்மானந்த தேரர்


இலங்கையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பற்றி, வெளிநாட்டு ஒற்றர் சேவைகள் பல இந்நாட்டில் செயல்பட்ட போதிலும் அவர்களுக்கு தாக்குதல் தொடர்பாக ஒரு துரும்புத் தகவல் கூட கிடைக்காத நிலையில், மிகச் சரியாக தெரிந்துவைத்திருந்து கூறியது யார்? இந்தியா!

உயிர்ந்த ஞாயிறு தாக்குதலுக்கு முந்திய தினம் நடைபெற்ற இறுதி பாதுகாப்பு ஆலோசனைச் சபைக் கூட்டத்துக்கு வந்திருந்த வெளிநாட்டு இராஜதந்திரி எந்த நாட்டிலிருந்து வந்தார்? இந்தியா!2019 ஜனாதிபதித் தேர்தலுக்கு அதிகமாக பணத்தை செலவு செய்தது யார்? இந்தியா!ஐனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு, 10 நாட்களில், இலங்கை ஜனாதிபதி சென்ற நாடு எது? இந்தியா!நீர்கொழும்பு கடுவாப்பிட்டி ஆலய குண்டுதாரியின் மனைவியும் சஹரான் குழுவில் சத்திய பிரமாணம் செய்தவர் எனக் கருதப்படும் ‘சாரா’ பாதுகாப்பாக தங்கியிருக்கும் நாடு எது? இந்தியா!நமது மக்கள் இந்த அரசியலை எப்போதான் படிப்பார்களோ ?

ஷெஹான் மாலக கமகே (Shehan Malaka Gamage)
Facebook
Twitter
LinkedIn

தற்போதைய செய்திகள்