பத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுலகல பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மூவர் மீது, காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
அம்பலாங்கொட, தொடஹேன பகுதியைச் சேர்ந்த சுசிதா இரோஷனி மற்றும் குலிகொட பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி ஓட்டுநரான லலித் சுசந்த டி சில்வா ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த டி.என்.ஜி. மல்லிகா என்ற பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர் உயிரிழந்த சுசிதா இரோஷனியின் தாயார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண், பத்தேகமவில் உள்ள காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவில் வழக்கு ஒன்றிற்காக ஞாயிற்றுக்கிழமை கையொப்பமிட்டுவிட்டு மீண்டும் அம்பலாங்கொட நோக்கிப் பயணித்தபோதே, காரில் வந்த நபர்களால் T-56 ரக துப்பாக்கியால் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண், ‘லொக்கு பெட்டி’ எனப்படும் சுஜீவ ருவன் குமாரவின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர் எனவும், இந்த படுகொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘கரந்தெனிய சுத்தா’ எனப்படும் சோபனஹந்தி ஜெயலத் டி சில்வா என்பவரே மெஹெய More விபரங்கள் வெளிவந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










